மாவட்ட செய்திகள்

குரோம்பேட்டையில் அரிசி கடை உரிமையாளர் வெட்டிக்கொலை + "||" + Rice shop owner murdered in Crompton

குரோம்பேட்டையில் அரிசி கடை உரிமையாளர் வெட்டிக்கொலை

குரோம்பேட்டையில் அரிசி கடை உரிமையாளர் வெட்டிக்கொலை
அரிசி கடை உரிமையாளர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குரோம்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை சேம்பர்ஸ் காலனி தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 46). இவர், குரோம்பேட்டை சி.எல்.சி. சாலையில் அரிசி கடை வைத்து நடத்தி வந்தார்.

இவருக்கு இந்துமதி என்ற மனைவியும், கிருஷ்ணராஜ், அசோக் ராஜ் என 2 மகன்களும் உள்ளனர்.


வெட்டிக்கொலை

நேற்று மாலை ஆனந்தராஜ், கடையை திறக்க சென்றார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் ஆனந்தராஜை சுற்றி வளைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்து தப்பி ஓடினார்.

ஆனால் மர்மநபர்கள் விடாமல் ஓட ஓட விரட்டிச்சென்று ஆனந்தராஜை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால்தான் ஆனந்தராஜ் கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வாணவெடிகள் இருந்த கார் வெடித்து சிதறியது 37 வீடுகள் சேதம்-உரிமையாளர் கைது
சாத்தான்குளம் அருகே வாணவெடிகள் இருந்த கார் வெடித்து சிதறியதில் 37 வீடுகள் சேதம் அடைந்தன. இதுதொடர் பாக உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
2. பா.ஜனதா பிரமுகர் ஓட, ஓட வெட்டிக்கொலை
சிவகங்கையில் ஓட, ஓட விரட்டி பா.ஜனதா பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதையடுத்து பா.ஜனதா கட்சியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. சென்னை மீனவர் வெட்டிக்கொலை
சென்னை மீனவர் வெட்டிக்கொலை.
4. செய்யூர் அருகே சென்னை மீனவர் வெட்டிக்கொலை
செய்யூர் அருகே சென்னை மீனவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
5. மீனவர் வெட்டிக்கொலை
செய்யூர் அருகே கொலை வழக்கில் பழிக்குப்பழியாக சென்னை மீனவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை