ஆறுமுகநேரி பகுதியில் கஞ்சா விற்ற 2பேர் கைது
ஆறுமுகநேரி பகுதியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, ஆறுமுகநேரி பாரதி நகரில், அதே பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன் கஞ்சா விற்றுள்ளான். அவனை போலீஸ் பிடித்தனர். அவனிடம் இருந்த கஞ்ா பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து காயல்பட்டினம் கோமான்நடுத் தெருப்பகுதியில் போலீசார் சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த சாகுல் அமீது மகன் முகைதீன் சாஹிப் (வயது 38) கஞ்சா விற்று வந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து, சிறுவன் மற்றும் முகைதீன் சாஹிப் ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story