ஆறுமுகநேரியில் சமையல் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு கட்டிட தொழிலாளி கைது
ஆறுமுகநேரியில் சமையல் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்
ஆறுமுகநேரி:
குமரிமாவட்டம் தேங்காய்பட்டணத்தை சேர்ந்தவர் ஷாம்பாய்(வயதுஸ40). சமையால் தொழிலாளி. இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுகநேரி தபால் நிலையம் எதிரில் உள்ள பெரியான்விளை ரோடு பகுதியில் வந்து குடியேறினார். அப்பகுதியில் குடும்பத்தினருடன் அவர் வசித்து வருகிறார். இவரது மனைவி அகமது ரெஜினா. இந்நிலையில் பெரியான்விளை பகுதியை சேர்ந்த ஆத்திமுத்து மகன் முனீஸ் என்பவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஷாம்பாய் அண்ணன் மகளான ஷார்ஜா பாத்திமாவை காதலித்து கலப்பு திருமணம் செய்துள்ளார். அப்போது சார்ஜா பாத்திமா பள்ளியில் படித்த சான்றிதழ்களை ஷாம் பாய் அண்ணன் வீட்டார் கொடுக்காததால், இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஷாம்பாய் சமையல் வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பெரியான் விளை தெருவில் வந்தபோது, அங்கு நின்றுகொண்டிருந்த முனீஸ், ஷாம்பாயை வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசியதுடன் அரிவாளால் தலையில் வெட்டியுள்ளார்.
இதை தடுக்க வந்த ஷாம்பாய் மனைவி அகமது ரெஜினா வை கல்லால் அடித்து காயப்படுத்தியதுடன் கொலைமிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டார்.
இருவரும் காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பினர். இது தொடர்பாக ஷாம் பாய் கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முனீஸை கைது செய்தார்.
Related Tags :
Next Story