மலைக்கிராம மக்களுக்கு கொரோனா தடுப்பூசி


மலைக்கிராம மக்களுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 19 July 2021 8:30 PM IST (Updated: 19 July 2021 8:30 PM IST)
t-max-icont-min-icon

பெரும்பாறை அருகே மணலூர் ஊராட்சியில் மலைக்கிராம மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது.

திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா மணலூர் ஊராட்சி பெரும்பாறை, புதூர், குத்துக்காடு, எம்.ஜி.ஆர்.நகர், கொங்கப்பட்டி, மூலக்கடை ஆகிய மலைக்கிராமங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

 பெரும்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கிரிஸ் ஆலன் தலைமையில் மருத்துவ குழுவினர்கள் வீடு, வீடாக சென்று மலைக்கிராம மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு கொண்டனர்.

Next Story