பெண் உள்பட 2 பேர் சிக்கினர்

செம்பட்டி அருகே ஸ்கூட்டரில் கஞ்சா கடத்திய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெண் உள்பட 2 பேர் சிக்கினர்
Published on

திண்டுக்கல் :

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே லட்சுமிபுரம் குதிரை கோவில் என்னுமிடத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும்படி ஸ்கூட்டரில் வந்த ஒரு வாலிபரையும், அவருடன் வந்த பெண்ணையும் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து அவர்கள் வந்த ஸ்கூட்டரை பாலீசார் சோதனை செய்தனர்.

அதில் ஸ்கூட்டரின் இருக்கைக்கு கீழ் 1 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சாவையும், ஸ்கூட்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அவர்கள் சித்தையன்கோட்டை அருகே சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த செல்வம் மனைவி கவிப்பிரியா (வயது 30), அவருடைய உறவினர் பரத் (20) என்றும், அவர்கள் கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிப்பிரியா, பரத் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com