கோர்ட்டு, தட்டச்சு பயிற்சி மையங்கள் திறப்பு


கோர்ட்டு, தட்டச்சு பயிற்சி மையங்கள் திறப்பு
x
தினத்தந்தி 19 July 2021 9:40 PM IST (Updated: 19 July 2021 9:40 PM IST)
t-max-icont-min-icon

கோர்ட்டு, தட்டச்சு பயிற்சி மையங்கள் திறப்பு

கோவை

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்ததால் கோர்ட்டு, ஐ.டி.ஐ. மற்றும தட்டச்சு பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று பணிபுரிந்தனர்.

கூடுதல் தளர்வுகள்

கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் கடந்த மே மாதம் 24-ந் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் கூடுதலாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 


இந்த நிலையில் 10-வது முறையாக  வருகிற 31-ந் தேதி வரை 2 வாரத்துக்கு அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் கோவையில் நேற்று முதல் அமலுக்கு வந்தன.

அதன்படி தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களின் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்கள், தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் திறக்கப்பட்டன.

 தட்டச்சு வகுப்பு களுக்கு  வந்த மாணவ- மாணவிகளுக்கு உடல் வெப்பநிலை பரி சோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி வழங்கப்பட்டது. 

அங்கு 50 சத வீத மாணவர்களுக்கு சுழற்சி முறையில் அனுமதி அளிக்கப்படுகின்ற னர். நேற்று முதல் நாள் என்பதால் குறைவான மாணவர்களே வந்திருந்தனர்.

ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை

இதேபோல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக வினியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாக பணிகளை மேற்கொள்வதற்காக நேற்று ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தனர். 

இதில், செல்வபுரம் மாநகராட்சி பள்ளியில் கொரோனா வழிகாட்டு நெறி முறைகள் மற்றும் மாணவர் சேர்க்கை குறித்து ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் அறிவுறுத்தினார். 

இதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் பள்ளிகளில் இருந்தவாறு மாணவர்க ளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தினர்.

இதற்கிடையே பிளஸ் -2 தேர்வு முடிவுகள் வெளியானதால் டவுன்ஹா லில் உள்ள துணி வணிகர் சங்க பெண்கள் பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 

அப்போது பள்ளிகளுக்கு வந்த மாணவ -மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் முக கவசத்தை சரியாக அணிய அறிவுறுத்தப்பட்டனர்.

கோர்ட்டு திறப்பு

மேலும் கோவையில் கோர்ட்டுகள் அனைத்தும் நேற்று திறக்கப்பட்டு வழக்கமான பணிகள் நடைபெற்றன. ஜாமீன் மனுக்கள் மற்றும் சாட்சிகள் மீதான விசாரணை நடைபெற்றது. 

கோர்ட்டில் வழக்கு விசாரணை முடிந்த உடன், வக்கீல்கள் கோர்ட்டு அறையை விட்டு வெளியே செல்ல அறிவுறுத்தப்பட்டனர். பார் கவுன்சில், நூலகம், கேன்டீன் உள்ளிட்டவை செயல்பட அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் மாநிலங்களுக்கு இடையே தனியார் மற்றும் அரசு போக்குவரத்து, திரையரங்குகள், மது பார்கள், நீச்சல் குளங்கள், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, கலாசார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் திறக்க தடை நீடிக்கிறது.


Next Story