சித்தாபுதூர் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்க வேண்டும்
சித்தாபுதூர் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்க வேண்டும்
கோவை
வேலைக்கு சென்று வர வசதியாக சித்தாபுதூர் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்க வேண்டும் என குறைதீர்ப்பு முகாமில் சுகாதார பணியாளர்கள் மனு கொடுத்தனர்.
வீடுகள் ஒதுக்க கோரிக்கை
கோவை கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு முகாமையொட்டி, நேற்று பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மனு கொடுக்க வந்தனர். அங்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பெட்டியில் தங்கள் மனுக்களை போட்டுவிட்டு சென்றனர்.
இதில், சித்தாபுதூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் குடிசை அமைத்து தங்கி இருந்த சுகாதார பணியாளர்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில்,
சித்தாபுதூர் ஹவுசிங்யூனிட் அடுக்குமாடி குடியி ருப்புகள் பழுதடைந்ததால் குடியிருப்புவாசிகளையும், எங்களையும் மாவட்ட நிர்வாகம் காலி செய்ய சொல்லி உத்தரவிட்டது.
இதில், 216 பேருக்கு வீடுகள் ஒதுக்கப்படுகிறது. குடிசையில் வசித்த எங்களுக்கு கீரணத்தம் கல்லுக்குழி பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் சுகாதார பணி உள்ளிட்ட வேலைகளுக்காக கோவைக்கு வர வேண்டி உள்ளது.
எனவே எங்க ளுக்கு சித்தாபுதூர் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மாற்று இடம் வேண்டும்
கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் மூர்த்தி தலைமையில் அளித்த மனுவில், கோவை வடக்கு பகுதி 1622- எண் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி,
ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டி ஆபாசமாக பேசிய டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலக ஊழியர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
உப்பிலிபாளையம் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், கோவை விமான நிலைய விரிவாக்க பணிக்காக சிங்காநல்லூர், உப்பிலிபாளையம் பகுதி களில் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
அந்த நிலத்திற்கு ஈடாக வழங்கிய பணம் குறைவாக உள்ளது. மேலும் அரசூர் பகுதியில் வழங்கப்படுவ தாக அறிவித்த படி மாற்று இடம் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story