மனோஜுக்கு நிபந்தனை ஜாமீன்
மனோஜுக்கு நிபந்தனை ஜாமீன்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் உள்ள பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கேரளா மாநிலத்தை சேர்ந்த சயான், மனோஜ், ஜித்தின்ராய், சந்தோஷ்சாமி, திபு, சதீசன் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
வழக்கு தொடர்பாக சயான், மனோஜ் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டு சயானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து மனோஜுக்கு ஜாமீன் வழங்க கோரி ஊட்டி கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா மனோஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். வழக்கு முடியும் வரை ஊட்டியில் தங்கி இருக்க வேண்டும். வாரந்தோறும் திங்கட்கிழமை கோர்ட்டில் கையெழுத்து போட வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வழக்கில் சம்பந்தப்பட்ட 10 பேரும் ஜாமீனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story