

திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று மேலும் 78 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று வரை 927 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை மாவட்டத்தில் 51 ஆயிரத்து 354 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 49 ஆயிரத்து 799 பேர் குணமடைந்து உள்ளனர். 628 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று சுகாதாரத்துற அதிகாரிகள் தெரிவித்தனர்.