போக்குவரத்து விதிகளை மீறியதாக 598 பேர் மீது வழக்கு


போக்குவரத்து விதிகளை மீறியதாக  598 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 20 July 2021 12:05 AM IST (Updated: 20 July 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து விதிகளை மீறியதாக 598 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ராமநாதபுரம்,ஜூலை.
ராமநாதபுரம் போலீஸ் உட்கோட்ட பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் அந்தந்த பகுதி போலீசார் நேற்று முன் தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது. அதிக வேகத்தில் சென்றதாக ஒருவர் மீதும், சிகப்பு விளக்கு ஒளிரும்போது கடந்து சென்றதாக 10 பேர் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற 38 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 357 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 95 பேர் மீதும், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றி சென்றதாக 5 பேர் மீதும், சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 22 பேர் மீதும், இதர பிரிவுகளின் கீழ் 71 பேர் மீதும் என மொத்தம் 598 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.79 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது தவிர, முகக் கவசம் அணியாமல் சாலைகளில் சென்றதாக 24 பேரிடம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 5 பேரிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டது. தேவையின்றி சாலைகளில் சுற்றி திரிந்த ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Next Story