பொது இடங்களில் ஆடு, மாடுகளை பலியிட தடை


பொது இடங்களில் ஆடு, மாடுகளை பலியிட தடை
x
தினத்தந்தி 20 July 2021 12:06 AM IST (Updated: 20 July 2021 12:06 AM IST)
t-max-icont-min-icon

ஆடு, மாடுகளை பலியிட தடை

வேலூர்

முஸ்லிம் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் நாளை (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையில் குர்பானி எனப்படும் வழிபாட்டின்போது ஆடு, மாடு, ஒட்டகம் என்று தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பலியிட்டு அவற்றை ஏழைகளுக்கு பகிர்ந்தளிப்பார்கள். குர்பானி நிகழ்ச்சியில் பொது இடங்களில் ஆடு, மாடு, ஒட்டகத்தை வெட்டக்கூடாது என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை நாளில் பொது இடங்களில் விலங்குகளை பலியிடுவது, கூட்டாக குர்பானி நடத்துவது,

 ஒட்டகம், பசுமாடு மற்றும் கன்றுக்குட்டிகளை பலியிடுவது தடை செய்யப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் சிறப்பு தொழுகைக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. மேற்கண்ட தடைகளை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்படும். ஒவ்வொரு தாலுகாவிலும் தாசில்தார் தலைமையில் உள்ளாட்சி, காவல்துறை, கால்நடை பராமரிப்புத்துறை ஆகியோர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது பொது இடங்களில் விலங்குகளை பலியிடுவது, கூட்டாக குர்பானி நடத்துவது, ஒட்டகம், பசுமாடு, கன்றுக்குட்டிகளை பலியிடுவது போன்றவைகள் நடைபெறாமல் இருப்பதை கண்காணிப்பார்கள். இந்த குழுவினை வருவாய் கோட்ட அலுவலர்கள் மேற்பார்வையிடுவார்கள்.

இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Next Story