மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர்
பாராளுமன்றத்தில் தாக்கலாக உள்ள மின்சார சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற கூடாது என மத்திய அரசை கண்டித்து நேற்று கரூரில் கோவை சாலையில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கரூர் மின்வட்ட கூட்டுக்குழு தலைவர் முருகவேல் தலைமை தாங்கினார். செயலாளர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதில் பொறியாளர் சங்கம், பொறியாளர் கழகம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யூ, ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.சி.சி.டி.யூ., தொழிலாளர் சம்மேளனம், ஏ.யூ.இ.எஸ்., ஐக்கிய சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story