போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற டிரைவர்


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற டிரைவர்
x
தினத்தந்தி 20 July 2021 1:20 AM IST (Updated: 20 July 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு டிரைவர் தீக்குளிக்க முயன்றார்.

விருதுநகர், 
ராஜபாளையம் குறிஞ்சி நகரை சேர்ந்த ஷேக் முகமது (வயது 42). கார் டிரைவராக உள்ள இவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் இவரது மனைவி லட்சியமா பானுவுக்கும், இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனது இரண்டு மகன்களுடன், மனைவி இவரை பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஷேக் முகமது நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். தனது மனைவி, மகன்களுடன் தன்னை சேர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுத்த இவர் திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story