குமரியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு
குமரியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் நேற்று முதல் திறக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்க சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது
நாகர்கோவில்:
குமரியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் நேற்று முதல் திறக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்க சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது
தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு
தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை பரவல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இதை தொடா்ந்து ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வு ஏற்படுத்தப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. எனினும் கல்வி நிறுவனங்களை திறப்பது தொடர்பாக அரசு இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை.
இந்த நிலையில் ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான வகுப்புகளை தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையம் நேற்று திறக்கப்பட்டது.
சமூக இடைவெளியுடன்...
முதல் நாளான நேற்று செய்முறை வகுப்புகள் நடந்தன. இதையடுத்து சுமார் 6 மாத இடைவெளிக்கு பிறகு மாணவ-மாணவிகள் வகுப்புக்கு சென்றனர். மாணவ-மாணவிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், முக கவசம் அணியவும் வலியுறுத்தப்பட்டு இருந்தது. கொரோனா கட்டுக்குள் வந்திருந்தாலும் மீண்டும் பரவும் அபாயம் உள்ளதால் வகுப்புகள் சுழற்சி முறையில் 2 ஷிப்ட்டுகளாக நடத்தப்பட்டது.
அதாவது காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை முதலாம் ஆண்டு வகுப்புகளும், மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை 2-ம் ஆண்டுக்கான வகுப்புகளும் நடைபெற்றது.
Related Tags :
Next Story