மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி + "||" + Motorcycle collision; youth kills

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் உள்ள நத்தகாடு பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ்(வயது 34). இவர் சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் ஆலத்தூர் கேட் சென்றார். அப்போது எதிரே நாட்டார்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(20) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், சத்யராஜின் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள், 2 ேபரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி கொண்டு செல்லும் வழியில் சத்யராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம்: ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்து வழக்கில் மீண்டும் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்து வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
2. சாலையோரம் நின்ற லாரியில் கார் மோதி கவிழ்ந்தது; வாலிபர் பலி
ராமேசுவரம் அருகே சாலையோரம் நின்ற லாரியில் கார் மோதி கவிழ்ந்தது. இதில் வாலிபர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
3. விபத்தில் அண்ணன்-தம்பி படுகாயம்
எஸ்.புதூர் அருகே கார் மோதிய விபத்தில் அண்ணன்-தம்பி இருவரும் படுகாயம் அடைந்தனர்.
4. நிச்சயதார்த்த கோஷ்டி சென்ற வேன் கவிழ்ந்து மணமகன் உள்பட 15 பேர் காயம்
ஆண்டிமடம் அருகே நிச்சயதார்த்த கோஷ்டியினர் சென்ற வேன் கவிழ்ந்ததில் மணமகன் உள்பட 15 பேர் காயமடைந்தனர்.
5. கார் மோதியதில் கொத்தனார் சாவு
மதுரையில் கார் மோதியதில் கொத்தனார் இறந்தார்.