விஷம் குடித்து பெண் தற்கொலை

நீடாமங்கலம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் அருகே உள்ள தேவங்குடி அக்ரகாரம் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்.விவசாயி. இவருடைய மனைவி கங்கா (வயது56). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று கங்கா வீட்டில் இருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து விட்டு மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கங்கா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேவங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகாசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com