கோவையில் 34 ஆயிரத்து 845 மாணவ-மாணவிகள் தேர்ச்சி


கோவையில் 34 ஆயிரத்து 845 மாணவ-மாணவிகள் தேர்ச்சி
x
தினத்தந்தி 20 July 2021 3:27 AM IST (Updated: 20 July 2021 3:27 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. கோவையில் 34 ஆயிரத்து 845 மாணவ-மாணவிகள் தேர்ச்சியடைந்தனர்.

கோவை

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. கோவையில் 34 ஆயிரத்து 845 மாணவ-மாணவிகள் தேர்ச்சியடைந்தனர்.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள்

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கொரோனா காரணமாக மாணவர்களின் நலன் கருதி ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாவும் கல்வித்துறை அறிவித்தது.

 இருப்பினும் உயர்கல்விக்கு செல்வதற்கு பிரச்சினை ஏற்படாத வகையில் மாணவ-மாணவிகளுக்கான தேர்வு மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. 

மாணவர்கள் அவர்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு இணையதளத்தில் பதிவு செய்து அவர்களது மதிப்பெண்ணை தெரிந்து கொண்டனர். அத்துடன் மாணவர்கள் பள்ளியில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது.

 கோவை மாவட்டத்தில் 356 பள்ளிகளில் படித்த 15 ஆயிரத்து 840 மாணவர்களும், 19 ஆயிரத்து 5 மாணவிகளும் என மொத்தம் 34 ஆயிரத்து 845 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன்படி கோவை மாவட்டம் 100 சதவீத தேர்ச்சியை எட்டி உள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் துள்ளிக்குதித்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள்

551 முதல் 600 மதிப்பெண்கள் வரை 3,137 மாணவ-மாணவிகள் எடுத்து உள்ளனர். இதேபோல் 501 முதல் 550.99 வரை 9,801 பேரும், 451 முதல் 500.99 வரை 9,525 பேரும், 401 முதல் 450.99 வரை 6,877 பேரும், 351 முதல் 400.99 வரை 3,701 பேரும், 301 முதல் 350.99 வரை 535 பேரும், 251 முதல் 300.99 வரை 277 பேரும், 201 முதல் 250.99 வரை 667 பேரும், 200-க்கு கீழ் 325 பேர்களும் எடுத்து தேர்ச்சி பெற்று உள்ளனர். மேலும் பொதுப்பாடப்பிரிவில் 32,732 பேரும், தொழிற் பாடப்பிரிவில் 2,113 பேரும் தேர்ச்சியடைந்தனர்.

உயர் கல்வித்துறை மாணவர் சேர்க்கையில் குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்கவே தசம முறையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மதிப்பெண் பட்டியல்

கோவை மாவட்டத்தில் 108 அரசுப்பள்ளிகளில் 4,657 மாணவர்களும், 6,958 மாணவிகளும் என மொத்தம் 11 ஆயிரத்து 615 பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

மாணவ-மாணவிகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் பிளஸ்-2 மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்கள், செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு எழுதலாம் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாநகராட்சி பள்ளிகள்

கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் 17 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் மாநகராட்சி பள்ளிகளில் படித்த மாணவர்கள் 605 பேர், மாணவிகள் 1,227 பேர் என மொத்தம் 1,832 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத தேர்ச்சியாகும். 

Next Story