காசிமேடு மீனவர்கள் 11 பேர் மாயம்; கடலோர காவல் படையினர் தேடுகிறார்கள்
காசிமேட்டில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்கள் மாயமானார்கள். அவர்களை கடலோர காவல் படையினர் தேடி வருகிறார்கள்.
காசிமேடு மீனவர்கள்
சென்னை ராயபுரத்தை சேர்ந்த மீனவர் ஜான் பார்மணி என்பவருக்கு சொந்தமான விசை படகில், கடந்த 7-ந் தேதி காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து டிரைவர் சோமேஷ் தலைமையில் மீனவர்கள் ஜெகன், நீலகண்டன், சூரியநாராயணன், காமேஷ், ராஜூ, சிவாஜி, பாவையா, ரவி, அப்பாராவ், பாபு ஆகிய 11 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
கடந்த 16-ந் தேதி ஆந்திர மாநிலம், ராமைய்யா பட்டினம் மீனவ கிராமம் அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது திடீரென விசைப்படகில் பழுது ஏற்பட்டு படகு மூழ்க தொடங்கியதாகவும், தங்களை காப்பாற்றுமாறும் படகில் இருந்த மீனவர்கள், கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மாயம்
இந்த நிலையில் 11 மீனவர்களும், கடந்த 17-ந் தேதி காசிமேடு துறைமுகத்துக்கு கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் இதுவரையிலும் மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்களை கரையில் இருந்து தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுவரை அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.
இதையடுத்து மாயமான 11 மீனவர்களையும் கண்டுபிடித்து தரக்கோரி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் கடலோர காவல் படை வீரர்கள் மாயமான 11 மீனவர்களையும் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story