தொழில் தொடங்க இலக்கு
வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் நடப்பாண்டில் 430 பேருக்கு மானியத்துடன் தொழில் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்
வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் நடப்பாண்டில் 430 பேருக்கு மானியத்துடன் தொழில் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது
தமிழகத்தில் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில்களை அதிகபட்சம் ரூ.15 லட்சம் முதலீட்டிலும், சேவைத் தொழிலை அதிகபட்சம் ரூ.5 லட்சம் முதலீட்டிலும், வியாபார தொழிலை அதிகபட்சம் ரூ.5 லட்சம் முதலீட்டில் தொடங்கலாம். இதற்கு மாநில அரசு 25 சதவீத மானியமும் வழங்கப்படும். மனுதாரர் மொத்த திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதம் சொந்த முதலீடு செய்ய வேண்டும்.
இலக்கு
இந்தத் திட்டத்தின் கீழ் www.msmeonline.tn.gov.in/uyegp/ என்ற இணையதள முகவரியில் அல்லது மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் செயல்படும் இலவச பொது வசதி மையம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, தாசில்தாரிடம் பெறப்பட்ட இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் உற்பத்தி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட விலைப்பட்டியல் ஆகியவற்றை சேர்த்து விண்ணப்பிக்கவேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் 430 பேருக்கு ரூ.4 கோடி மானியத்துடன் ரூ.16 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்தி புதிய தொழில் தொடங்கி பொருளாதார ஏற்றம் பெறலாம்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் அவர் கூறியுள்ளார்.
----
Reporter : M.Sivaraj_Staff Reporter Location : Tirupur - Tirupur
Related Tags :
Next Story