நத்தம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
நத்தம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்தது.
நத்தம்:
நத்தம் மாரியம்மன் கோவிலில் வருடந்தோறும் ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். இதற்காக சுற்றுவட்டார விவசாயிகள் தங்களது நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பூக்களை கூடை கூடையாக ஊர்வலமாக எடுத்து வந்து பூச்சொரிதல் நடத்துவார்கள்.
இந்த வருடம் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பூக்களை ஊர்வலமாக எடுத்து வரக்கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறை கூறியுள்ளது. அதன்பேரில் நேற்று நத்தம் பகுதி விவசாயிகள் தங்களது நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட மல்லிகை, ரோஜா, முல்லை, சம்பங்கி, பிச்சி, செவ்வந்தி, அரளி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை கூடைகளில் கொண்டு வந்து மாரியம்மன் கோவிலில் ஒப்படைத்தனர். இதைதொடர்ந்து அம்மனுக்கு வண்ணப்பூக்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் அம்மனை தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story