427 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு
427 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு
கோவை
கோவையில் இதுவரை 427 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருப்பு பூஞ்சை நோய்
கோவை மாவட்டத்தில் கடந்த மே மாதம் கொரோனா உச்சத்தில் இருந்தது. அப்போது தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக் கப்பட்டனர்.
அதன்பிறகு மாவட்ட நிர்வாகத்தின் தீவிர நடவடிக்கை காரணமாக தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், அதில் இருந்து குணமடைந்தவர்கள், சர்க்கரை நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் என சிலர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோவையில் நேற்று முன்தினம் ஒருவர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டார்.
இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 427 பேருக்கு கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது
427 பேருக்கு பாதிப்பு
கோவை மாவட்டத்தில் இதுவரை 427 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டனர். அதில் 82 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
மீதமுள்ள 345 பேர் கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனை களில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றவர்கள் தங்களது ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதிக்கப்படுகிறது. அதற்கான மருந்துகளை எடுத்து சர்க்கரை அளவை சீராக பாதுகாத்தால் நோய் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.
குணப்படுத்த முடியும்
இது ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் நோய் அல்ல. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தலைவலி, மூக் கடைப்பு, கருப்புநிற சளி, மூக்கு, வாய் பகுதியில் கருப்பு புள்ளிகள் காணப்படுவது, கண்ணில் வலி அல்லது வீக்கம், பல் வலி, பல் ஆடுதல் ஆகிய அறிகுறி ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.
இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் முற்றிலும் குணப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story