மேலும் ஒருவர் கைது


மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 20 July 2021 9:29 PM IST (Updated: 20 July 2021 9:29 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் தொழிலதிபர் வீட்டில் ரூ.8 லட்சம் திருடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர்
திருப்பூரில் தொழிலதிபர் வீட்டில் ரூ.8 லட்சம் திருடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
ரூ.8 லட்சம் திருட்டு
திருப்பூர் கோல்டன் நகரைச் சேர்ந்தவர் மாயாண்டி வயது 50. தொழிலதிபரான இவர், அப்பகுதியில் பனியன் வேஸ்ட் குடோன் வைத்து நடத்தி வருகிறார். கடந்த மாதம் 14ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள மற்றொரு வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
மறுநாள் காலை வந்து பார்த்த போது வீட்டின் பீரோவில் வைத்திருந்த ரூ.8 லட்சத்தை காணவில்லை. பீரோவை சாவியால் திறந்து பணம் திருடு போனது தெரியவந்தது.
மேலும் ஒருவர் கைது
இதைத்தொடர்ந்து மாயாண்டி அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் கோல்டன் நகர் ஜோதி நகரை சேர்ந்த அருண்குமார் 21, பவானி நகரை சேர்ந்த அபிஷேக் 21, ஏ.எஸ்.பண்டிட் நகரை சேர்ந்த சூர்யா21 ஆகிய 3 மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.3 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய திருப்பூர் போயம்பாளையம் மும்மூர்த்தி நகரை சேர்ந்த ரவீந்தர் 21 என்பவரை நேற்று தனிப்படை போலீசார் கோல்டன் நகர் பகுதியில் வைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

---
கைது செய்யப்பட்ட ரவீந்தர்
----
Image1 File Name : 5188131.jpg
----
Reporter : M.Sivaraj_Staff Reporter  Location : Tirupur - Tirupur

Next Story