அதிகபாரம் ஏற்றி கேரளாவுக்கு சென்ற 5 லாரிகளுக்கு அபராதம்
அதிகபாரம் ஏற்றி கேரளாவுக்கு சென்ற 5 லாரிகளுக்கு அபராதம்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதிகளில் இருந்து அதிக பாரம் ஏற்றி லாரிகள் கேரளாவுக்கு செல்வதாக கோவை போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினத்திற்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில் கிணத்துக்கடவு பகுதியில் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் தீவிரமாக வாகனங்களை கண்காணிக்க கோவை போலீஸ்சூப்பிரண்டு செல்வவநாகரத்தினம் கிணத்துக்கடவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து நேற்று கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேசமூர்த்தி, அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் கிணத்துக்கடவு அருகே தமிழக-கேரளா எல்லைபகுதியில் வீரப்பகவுண்டனூர் போலீஸ் சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கிணத்துக்கடவு பகுதிகளில் இருந்து லாரிகளில் அதிக (கல் லோடு) பாரம் ஏற்றிக் கொண்டு கேரளா சென்ற 5 லாரிகளை மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த லாரிகளை கிணத்துக்கடவு போலீஸ்நிலையம் கொண்டுவந்து அந்த லாரிகளில் ஏற்றிவந்த பாரத்தை எடைபார்த்தபோது லாரியில் அளவுக்கு அதிகமாக பாரம் எற்றப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து 5 லாரிகளின் உரிமையாளர்களுக்கு போலீசார் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 460 அபராதம் விதித்தனர். கிணத்துக்கடவு வழியாக கேரளாவுக்கு அடிக்கடி கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு செல்வதால் சாலைகளும் பழுதுதாகின்றன.
மேலும் அந்த பகுதி மக்கள் சாலைகளில் செல்லும்போது அச்சம் அடைந்து காணப்பட்டனர்.தற்போது போலீசார் அதிகபாரம் ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம் விதித்துள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தனர்.
Related Tags :
Next Story