ஆதிமுத்து மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா


ஆதிமுத்து மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா
x

மூங்கில்துறைப்பட்டு அருகே ஆதிமுத்து மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது.

மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு அருகே  பொருவளூர் எம்.ஜி.ஆர். நகரில் ஆதிமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நேற்று முன்தினம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.  தொடர்ந்து கூழ்வார்த்தல், அன்னதானம், பூங்கரகம் எடுத்து வருதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதித்து சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story