78 ரவுடிகள் கைது


78 ரவுடிகள் கைது
x
தினத்தந்தி 20 July 2021 10:55 PM IST (Updated: 20 July 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் மேலும் 78 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையை சீர்குலைக்கும் நோக்கில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை கைது செய்ய போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவிட்டார். அதன்படி 7 உட்கோட்டங்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி ரவுடிகளை கைது செய்து வருகின்றனர்.

78 ரவுடிகள் கைது 

இதன்படி கடந்த 12-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை 78 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். மாவட்டத்தில் இது வரை சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த 125 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் சிதம்பரம் உட்கோட்டத்தில் 26 பேர், சேத்தியாத்தோப்பு உட்கோட்டத்தில் 27 பேர், நெய்வேலி உட்கோட்டத்தில் 25 ரவுடிகள், விருத்தாசலம் உட்கோட்டத்தில் 21 ரவுடிகள், திட்டக்குடி உட்கோட்டத்தில் 19 ரவுடிகள், கடலூர் உட்கோட்டத்தில் 4 பேர், பண்ருட்டி உட்கோட்டத்தில் 3 ரவுடிகள் என 125 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Next Story