முதியவர் கைது


முதியவர் கைது
x
தினத்தந்தி 20 July 2021 10:55 PM IST (Updated: 20 July 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு திருட்டு வழக்கில் தேடப்பட்ட முதியவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ள தொருவளூர் பகுதியை சேர்ந்தவர்  சீனிநூர்தீன் (வயது 61). இவர் மீது ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் 4 திருட்டு வழக்குகளும் பஜார் காவல் நிலையம் மற்றும் தேவிபட்டிணம் காவல் நிலையங்களில் தலா ஒரு திருட்டு வழக்குகளும் உள்ளன. 
இவர் வீடு புகுந்து திருடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். நீண்ட நாட்களாக இவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தநிலையில் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார்  பதுங்கியிருந்த சீனி நூர்தீனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து 15 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Next Story