கீரனூர்,
அன்னவாசலை சேர்ந்தவர் இப்ராம்ஷா பர்ஷத். இவரது மனைவி ரம்ஜான் பாத்திமா (வயது 20). இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு இப்ராம்ஷா பர்ஷத் குடும்பத்தினர் ரம்ஜான் பாத்திமாவை கொடுமைப்படுத்தினராம். அதுமட்டுமின்றி திருச்சி காட்டூைர சேர்ந்த ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ரம்ஜான் பாத்திமா கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லதா விசாரணை நடத்தி ரம்ஜான் பாத்திமா, கணவர், மாமனார் நாகூர்கனி, மாமியார் ரஜிமா பேகம், நாத்தனார் பர்வீன், பர்ஜானா, சின்னமாமனார் அப்துல்லா உள்பட 9 பேர் வழக்குப்பதிவு செய்தனர். இதில் அப்துல்லா கைது செய்யப்பட்டார்.