2 பேர் கைது


2 பேர் கைது
x
தினத்தந்தி 20 July 2021 11:40 PM IST (Updated: 20 July 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

நாணய மாற்று தொழிலில் ஈடுபட்டவர் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர், 
சிவகாசியை சேர்ந்த நாணய மாற்று தொழில் செய்யும் சரவணன் என்பவரை கடத்தியதாக ஆமத்தூர் போலீசார் 5 பேர் கொண்ட கும்பல் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த ஆறுமுகச்சாமி (வயது 42), சாலை புதூரை சேர்ந்த ராம் கனகசபாபதி (50) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.  போலீஸ் விசாரணையில் ஆறுமுகச்சாமி நாணய மாற்று வணிக தொடர்பில் சரவணன், தனக்கு பணம் தர வேண்டி உள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

Next Story