இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
Published on

சாத்தூர்,

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாரியம்மன் காவில்

சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சித்திரை மாத கடைசி வெள்ளிக்கிழமையையாட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு வழிபாட்டில் விருது நகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

பக்தர்களின் வசதிக்காக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி தலைமையில் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com