ஆணையாளர் காலையில் பணியிட மாற்றம், மாலையில் பணியிடை நீக்கம்
வாணியம்பாடி நகராட்சி ஆணையாளரை இன்று காலையில் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. மாலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.
வாணியம்பாடி
வாணியம்பாடி நகராட்சி ஆணையாளரை இன்று காலையில் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. மாலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.
பணியிட மாற்றம்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி ஆணையாளராக புவனேஸ்வரன் என்ற அண்ணாமலை பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இன்று காலை அவரை மயிலாடுதுறைக்கு இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில் வாணியம்பாடி நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து நகராட்சி அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் செயல்பட்டு வரும் பணிகள் குறித்து சில ஆவணங்களின் விவரங்களை கேட்டுள்ளார், மேலும் சில கோப்புகளில் முழுமையாக தகவலை பதிவு செய்யாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கலெக்டர், ஆணையாளரிடம் விசாரிக்க கேட்டபோது அவர் அங்கு இல்லை, உரிய விளக்கம் யாரும் அளிக்கவில்லை என்று தெரிகிறது.
பணியிடை நீக்கம்
இதனால் நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வரனை கலெக்டர் அமர் குஷ்வாஹா பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
காலையில் தமிழக அரசு சார்பில் பணியிட மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாலையில் மாவட்ட கலெக்டர் அவரை பணியிடை நீக்கம் செய்தார்.
இச்சம்பவம் நகராட்சி அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story