கரூர் மாவட்டத்தில்கரூர் மாவட்டத்தில்புதிதாக 13 பேருக்கு கொரோனா

கரூர் மாவட்டத்தில்கரூர் மாவட்டத்தில்புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டள்ளது.
கரூர்
கரூர்
Published on

கரூர்

கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தொற்று குறைந்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 29 பேர் குணமடைந்ததால் அவர்கள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போதைய நிலவரப்படி 228 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com