எளிமையாக படித்து பழக தினமும் `தினத்தந்தி' படியுங்கள்- திருச்சி கலெக்டர் சிவராசு அறிவுரை


எளிமையாக படித்து பழக தினமும் `தினத்தந்தி படியுங்கள்- திருச்சி கலெக்டர் சிவராசு அறிவுரை
x

எளிமையாக படித்து பழக தினமும் `தினத்தந்தி' படியுங்கள் என்று திருச்சி கலெக்டர் சிவராசு அறிவுரை வழங்கினார்.

திருச்சி, 
எளிமையாக படித்து பழக தினமும் `தினத்தந்தி' படியுங்கள் என்று திருச்சி கலெக்டர் சிவராசு அறிவுரை வழங்கினார்.

`தினத்தந்தி' படியுங்கள்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி கே.கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முழு எழுத்தறிவு இயக்க தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று இயக்கத்தை தொடங்கி வைத்தார். 
நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு பேசுகையில், "கையெழுத்து போடவும், எழுதவும் தெரியாததால் முதியவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். பெற்ற மகன், மகள்களே அவர்களுடைய சொத்துக்களை ஏமாற்றி வாங்கி கொள்கிறார்கள். இப்படி ஏமாற்றப்பட்டதாக வாரந்தோறும் குறைதீர்க்கும் முகாமில் 20 முதியவர்கள் வரை என்னிடம் புகார் கொடுக்கிறார்கள். 

எனவே, முதலில் கையெழுத்து போட கற்றுக் கொள்ளுங்கள். பின்னர் படிக்க கற்றுக் கொள்ளுங்கள். எளிமையாக படித்து பழக தினமும் தினத்தந்தி நாளிதழ் படியுங்கள். இத்தனை வயதில் எழுத, படிப்பதற்கு சற்று சிரமமாக தான் இருக்கும். ஆனால் தொடர்ந்து முயற்சி செய்தால் நிச்சயம் எழுத, படிக்க கற்றுக் கொள்ளலாம்" என்று பேசினார்.

Next Story