கஞ்சா விற்ற 3 பேர் பிடிபட்டனர்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 21 July 2021 12:52 AM IST (Updated: 21 July 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்ற 3 பேர் பிடிபட்டனர்

கரூர்
கரூர் வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஞ்சமாதேவி அருகே உள்ள கோவில் பின்புறம் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த வினோத்குமார் (வயது 29) என்பவரை போலீசார் பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது திருமாநிலையூர் பகுதியில் கஞ்சா விற்றதாக சஞ்சய்(20) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், தான்தோன்றிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது ராயனூர் பகுதியில் கஞ்சா விற்றதாக சந்துரு (21) என்பவரை பிடித்து அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
1 More update

Next Story