தர்மபுரி அருகே தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் தொழிலாளி பிணம் போலீசார் விசாரணை


தர்மபுரி அருகே தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் தொழிலாளி பிணம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 July 2021 12:58 AM IST (Updated: 21 July 2021 12:58 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே ரெயில் தண்டவாளத்தில் ஓமலூரை சேர்ந்த தொழிலாளி தலை துண்டான நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தர்மபுரி:

தண்டவாளத்தில் பிணம்
தர்மபுரி அருகே உள்ள முத்துக்கவுண்டன் கொட்டாய் பகுதியில் ரெயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. இந்த தண்டவாள பகுதியில் நேற்று முன்தினம் இரவு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலை துண்டான நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தர்மபுரி ரெயில்வே போலீசாருக்கு அந்த வழியாக சென்றவர்கள் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது இறந்து கிடந்தவர் சேலம் மாவட்டம்  ஓமலூர் அருகே உள்ள தாராபுரம் பகுதியை சேர்ந்த விஜய் (வயது 24) என்பதும், ரெயில் மோதி இறந்ததும் தெரியவந்தது.
தற்கொலையா?
விஜய் சமையல் குழுக்களில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த தர்மபுரி ரெயில்வே போலீசார், விஜய் ரெயில் தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி இறந்தாரா? அல்லது ரெயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story