மாவட்ட செய்திகள்

ஆற்றில் மூழ்கியவர் பிணமாக மீட்பு + "||" + Rescue of drowned corpse in rive

ஆற்றில் மூழ்கியவர் பிணமாக மீட்பு

ஆற்றில் மூழ்கியவர் பிணமாக மீட்பு
விக்கிரமசிங்கபுரம் அருகே ஆற்றில் மூழ்கியவர் பிணமாக மீட்கப்பட்டார்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே ஆலடியூர் வலசை தெருவை சேர்ந்தவர் அனந்தைய்யா மகன் பேச்சிமுத்து (வயது 39). இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தனது வேலைகளை முடித்துவிட்டு ஆலடியூர் தாமிரபரணி ஆற்றிற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது தண்ணீரில் மூழ்கி காணாமல் போனார். சம்பவம் குறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் அம்பை தீயணைப்பு துறையினர் நேற்று ஆற்றில் இறங்கி தேடி பேச்சிமுத்துவை பிணமாக மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாபநாசம் தலையணையில் மூழ்கிய பாலிடெக்னிக் மாணவர் பிணமாக மீட்பு
பாபநாசம் தலையணையில் மூழ்கிய பாலிடெக்னிக் மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.