ஆடி செவ்வாய்க்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆடி செவ்வாய்க்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 20 July 2021 7:58 PM GMT (Updated: 20 July 2021 7:58 PM GMT)

ஆடி செவ்வாய்க்கிழமையையொட்டி நெல்லையில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

நெல்லை:
ஆடி மாதம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். மேலும் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களுக்கு கூழ் வழங்கப்படும். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் கூழ் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் நேற்று ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பேராத்து செல்வி அம்மன் கோவிலில் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து அம்மனை தரிசனம் செய்தனர்.
இதேபோல் நெல்லை டவுன் பிட்டாபுரத்தி அம்மன் கோவில், கொக்கிரகுளம் முத்தாரம்மன் கோவில், பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலிலும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Next Story