தாழ்வாக இருந்த மின்கம்பியை சரிசெய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்


தாழ்வாக இருந்த மின்கம்பியை சரிசெய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
x
தினத்தந்தி 21 July 2021 1:46 AM IST (Updated: 21 July 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி பழைய பஸ்நிலையம் அருகே தாழ்வாக இருந்த மின்கம்பியை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரிசெய்தார்.

தென்காசி:
தென்காசி பழைய பஸ் நிலையம் அருகில் மின் கம்பிகள் தாழ்வாக இருந்தன. இதனால் அந்த வழியாக வரும் கனரக வாகனங்கள் மீது அந்த கம்பிகள் உரசியபடி சென்றன. பாதுகாப்பில்லாத சூழலில் இந்த கம்பிகள் இருந்ததை கண்ட அந்த பகுதியில் பணியில் இருந்த தென்காசி போலீஸ் போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆத்திமுத்து, பொக்லைன் எந்திரத்தை வரவழைத்தார். அதில் ஏறி மின் கம்பிகளை சரி செய்து வாகனங்கள் மின்கம்பிகளில் உரசாத அளவில் ஏற்பாடு செய்தார். இதனை பார்த்த அந்த பகுதியில் சென்ற பொதுமக்கள் அவரை பாராட்டினர்.

Next Story