மாணவி திடீர் சாவு

பள்ளி மாணவி திடீர்ரென பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாணவி திடீர் சாவு
Published on

தென்தாமரைகுளம்:

பள்ளி மாணவி திடீர்ரென பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பள்ளி மாணவி

தென்தாமரைகுளம் அருகே குமாரப்பெருமாள் விளையை சேர்ந்தவர் சாம்பெனடிக்ட் (வயது 42), விவசாயி. இவருக்கு விஜி (40) என்ற மனைவியும், அக்சயா ஜென்சி (14) என்ற மகளும் இருந்தனர்.

விஜி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகள் அக்சயா ஜென்சி அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அக்சயா ஜென்சி அடிக்கடி மூச்சு திணறலால் அவதிப்பட்டதால், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் இருக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டால் அவர் நீராவி பிடிப்பது வழக்கமாம்.

சாவு

அதே போல் நேற்று முன்தினம் மாலையில் அக்சயா ஜென்சிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக வழக்கம்போல் நீராவி பிடித்துள்ளார். அப்போது திடீரென்று அக்சயா ஜென்சி மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் கொட்டாரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, மாணவி அக்சயா ஜென்சி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதுபற்றி தகவல் அறிந்த தென்தாமரைகுளம் போலீசார் விரைந்து சென்று அக்சயா ஜென்சி உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com