சேலத்தில் ஜவுளி வியாபாரியிடம் ரூ.1¼ கோடி மோசடி-போலீசார் விசாரணை


சேலத்தில் ஜவுளி வியாபாரியிடம் ரூ.1¼ கோடி மோசடி-போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 July 2021 3:50 AM IST (Updated: 21 July 2021 3:50 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ஜவுளி வியாபாரியிடம் ரூ.1¼ கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மல்லி சுரேஷ் (வயது 35). அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இருவரும் ஜவுளி வியாபாரிகள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மல்லி சுரேசிடம் இருந்து ரூ.1 கோடியே 17 லட்சத்து 61 ஆயிரத்து 680-க்கு சங்கர் ஜவுளிகள் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான பணத்தை அவர் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த மோசடி குறித்து மல்லி சுரேஷ், சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே வேறு ஒரு வழக்கில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story