12 டன் நெல் விதைகள் தயாராக இருப்பு
முத்தூர் வேளாண் விரிவாக்க மையத்தில் நஞ்சை சம்பா பாசன சாகுபடிக்கு 12 டன் நெல் விதைகள் தயாராக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
முத்தூர்
முத்தூர் வேளாண் விரிவாக்க மையத்தில் நஞ்சை சம்பா பாசன சாகுபடிக்கு 12 டன் நெல் விதைகள் தயாராக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
கீழ்பவானி பாசன பகுதிகள்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம், வேலம்பாளையம், பூமாண்டன்வலசு, மேட்டுப்பாளையம், வள்ளியரச்சல், ராசாத்தாவலசு, ஆகிய வருவாய் கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு அடுத்த மாதம் ஆகஸ்டு முதல் தொடர் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தி இப்பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாதாரண மற்றும் திருந்திய நெல் ஆகிய நஞ்சை சம்பா நெல் சாகுபடி பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
12 டன் விதை நெல்
இந்த நிலையில் இப்பகுதி கீழ்பவானி பாசன விவசாயிகள் நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள் வெள்ளகோவில் வட்டார வேளாண்மை துறை மூலம் மானிய விலையில் வழங்க உள்ளது. இதற்காக முத்தூர் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் சான்று மற்றும் ஆதார இனத்தை சேர்ந்த ஐ.ஆர்.20, கோ20,கோ51 ஆகிய 2 ரகங்களை சேர்ந்த நெல் விதைகள் மொத்தம் 12 டன் அளவில் தயாராக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் மகசூல்
எனவே இப்பகுதி கீழ்பவானி பாசன விவசாயிகள் இந்த நெல் விதைகள் மற்றும் இடு பொருட்களை மானிய விலையில் பெற்று சாகுபடி செய்து கூடுதல் மகசூல் பெற்று பயன் அடைய முன்வர வேண்டும். இத்தகவலை வெள்ளகோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பொன்னுச்சாமி தெரிவித்து உள்ளார்.
----
Related Tags :
Next Story