மாவட்ட செய்திகள்

மின்மயமாகும் திண்டுக்கல்-பாலக்காடு ரெயில்பாதை உடுமலையில் கம்பங்கள் நிறுவும் பணி தீவிரம் + "||" + Dindigul Palakkad Railway In Udumalai The task of installing the poles

மின்மயமாகும் திண்டுக்கல்-பாலக்காடு ரெயில்பாதை உடுமலையில் கம்பங்கள் நிறுவும் பணி தீவிரம்

மின்மயமாகும் திண்டுக்கல்-பாலக்காடு ரெயில்பாதை உடுமலையில் கம்பங்கள் நிறுவும் பணி தீவிரம்
உடுமலையில், ரெயில் பாதையை மின்மயமாக்குவதற்காக கம்பங்கள் நிறுவும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
உடுமலை, 

கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு முதல் தமிழ் நாட்டில் உள்ள திண்டுக்கல் வரையிலான ரெயில்பாதை முன்பு மீட்டர்கேஜ் ரெயில்பாதையாக இருந்து வந்தது. அதன் பிறகு இந்த ரெயில்பாதை அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென்னக ரெயில்வே நிர்வாகம், பாலக்காடு முதல் பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம் வழியாக திண்டுக்கல் வரையிலான அகல ரெயில் பாதையை மின்மயமாக்க திட்டமிடப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் தற்போது உடுமலை பகுதியிலும் நடந்து வருகிறது.

அதன்படி மின்மயமாக்குதலுக்குத்தேவையான மின் கம்பங்கள் சரக்கு ரெயிலில் உடுமலைக்கு கொண்டு வரப்பட்டு, சரக்கு ரெயிலுடன் இணைக்கப்பட்டு கிரேன் மூலம் தூக்கி, ரெயில் பாதையில் தண்டவாளத்தை அடுத்துள்ள பகுதிகளில் நிறுவும் பணிகள் மற்றும் அந்த மின்கம்பங்கள் பதிக்கப்பட்ட இடங்களில் கம்பம் அசையாமல் பலம் பெறும் வகையில் தளம்பகுதியில் கான்கிரீட் போடும்பணிகள் ஆகியவை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த ரெயில்பாதை மின்மயமாக்கப்படும்பட்சத்தில் இந்த வழித்தடத்தில் கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் உள்ளது.