வாலிபர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை
தாராபுரம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.
தாராபுரம்,
தாராபுரத்தை அடுத்துள்ள வீராட்சி மங்கலத்தை சேர்ந்த நாகராஜ் என்பவர் மகன் கோபிநாத் (வயது 21). இவர் மர்ம ஆசாமிகளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக தாராபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கோபிநாத்தின் செல்போனுக்கு கடைசியாக பேசியது யார்? என்ற விவரங்களை சேகரித்து வருகிறார்கள். மேலும் கோபிநாத் கொலை செய்யப்பட்டு கிடந்த தாராபுரம்-உப்பாறு சாலையில் சம்பவம் நடந்த அன்று அதிகாலை நேரத்தில்அந்த வழியாக யார் யார்? சென்றனர் என அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த கொலை தொடர்பாக நேற்று மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தாராபுரம் வந்தார். இந்த கொலை தொடர்பாக 4 பேரிடம் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை விசாரணை நடத்தினர். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாய் சாங், துணை சூப்பிரண்டு தனராசு, இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story