2வது நாளாக நீதிபதி விசாரணை


2-வது நாளாக நீதிபதி விசாரணை
x
2-வது நாளாக நீதிபதி விசாரணை
தினத்தந்தி 21 July 2021 8:56 PM IST (Updated: 21 July 2021 8:56 PM IST)
t-max-icont-min-icon

2வது நாளாக நீதிபதி விசாரணை

கருமத்தம்பட்டி

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சட்டேந்திர பிரசாத் (வயது 45), இவர் கோவை கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். 

இவர் கடந்த 18-ந் தேதி இரவு மில்லில் இருந்து வெளியேறி, வேட்டைக்காரன்குட்டை குமார்நகரில் உள்ள மணி என்பவரின் வீட்டில் புகுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் பிடித்து, கருமத்தம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். அப்போது அவர் மயங்கி கீழே விழுந்தார். 

இதையடுத்து அவரை சோமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த நிலையில் விசாரணைக்கு அழைத்து வந்த வடமாநில தொழிலாளி மர்மமான முறையில் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில் வடமாநில தொழிலாளி சாவு குறித்து நேற்று முன்தினம் சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி வைஷ்ணவி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார்.

 இதனைத்தொடர்ந்து நேற்று சூலூர் நீதிமன்றத்திற்கு வட மாநில தொழிலாளர் உடன் தங்கியிருந்தவர்கள் மற்றும் மணி வீட்டிற்கு அருகில் உள்ளவர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டார். 

முதற்கட்ட விசாரணையில், வடமாநில தொழிலாளிக்கு மாரடைப்பு இருந்ததாகவும், மேலும் சற்றி மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தாகவும் உடன் வேலைபார்த்தவர்கள் தெரிவித்தனர்.


Next Story