இடையன்சாத்து கிராமத்தில் கோவில் பூட்டை உடைத்து விநாயகர் சிலை திருட்டு


இடையன்சாத்து கிராமத்தில் கோவில் பூட்டை உடைத்து விநாயகர் சிலை திருட்டு
x
தினத்தந்தி 21 July 2021 9:17 PM IST (Updated: 21 July 2021 9:17 PM IST)
t-max-icont-min-icon

கோவில் பூட்டை உடைத்து விநாயகர் சிலை திருட்டு

வேலூர்

வேலூர் பாகாயத்தை அடுத்த இடையன்சாத்து கிராமத்தில் காளியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் 2 அடி உயரம், சுமார் 1 அடி அகலத்தில் விநாயகர் கற்சிலையை பக்தர்கள் வைத்து வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் கோவில் பூட்டை உடைத்து விநாயகர் சிலையை திருடிச்சென்றுவிட்டனர்.

நேற்று காலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிலை திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
போலீசார் கூறுகையில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

Next Story