மாவட்ட செய்திகள்

வாலிபரை பாட்டிலால் குத்திய நண்பர் கைது + "||" + Arrested friend who stabbed Valiparai with a bottle

வாலிபரை பாட்டிலால் குத்திய நண்பர் கைது

வாலிபரை பாட்டிலால் குத்திய நண்பர் கைது
வாலிபரை பாட்டிலால் குத்திய நண்பர் கைது
கணபதி

கோவை ரத்தினபுரி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது26). ரத்தினபுரி பட்டேல் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (45). இருவரும் நண்வர்கள் ஆவர். சம்பவத்தன்று இருவரும்  அதே பகுதியில்  ஒன்றாக சேர்ந்து மது அருந்தினர். போதை தலைக்கேறியதால் இருவருக்கும் இடையே வாய்த்தகறாறு ஏற்பட்டது. 

தகறாறு முற்றிய நிலையில் மணிகண்டன் கீழே கிடந்த பாட்டிலை எடுத்து திடீரென கார்த்திக்கின் தலையில் குத்தி உள்ளார். இதில் காயம் அடைந்த அவரை அக்கம்,பக்கத்தினர் மீட்டு,  அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கார்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி கண்டனை கைது செய்தனர்.
--------------------