வந்தவாசி அருகே; கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை


வந்தவாசி அருகே; கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 July 2021 10:15 PM IST (Updated: 21 July 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

வந்தவாசி அருகே 9 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வருவாய் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

வந்தவாசி

வந்தவாசி அருகே 9 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வருவாய் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார். 

காதல் திருமணம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சேனல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஷீலா என்கிற விஜயசாந்தி (வயது 21). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். 

9 மாத கர்ப்பிணியான அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று வளைகாப்பு நடத்தப்பட்டது. பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சிக்காவது வருவார்கள் என்று எதிர்பார்த்த விஜயசாந்திக்கு பெற்றோர்கள் கலந்து கொள்ளவில்லை என்பதால் அவருக்கு மன உலைச்சல் ஏற்பட்டதாக தெரிகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

மனவருத்தத்தில் இருந்த விஜயசாந்தி வீட்டின் பின்புறம் இருந்த மரத்தில் சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார். உடனே உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார். 

இதுகுறித்து தெள்ளார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோனியா வழக்குப்பதிவு செய்தார்.

தற்கொலை செய்து கொண்ட விஜயசாந்திக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் செய்யாறு வருவாய் கோட்டாட்சியர்  மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story