சோலையார் அணை நீர்மட்டம் 150 அடியை தாண்டியது


சோலையார் அணை நீர்மட்டம் 150 அடியை தாண்டியது
x
தினத்தந்தி 21 July 2021 5:05 PM GMT (Updated: 2021-07-21T22:35:10+05:30)

சோலையார் அணை நீர்மட்டம் 150 அடியை தாண்டியது

வால்பாறை

வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமடைந்து வருவதால் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. 

இதனால் இங்குள்ள ஆறுகள், நீரோடைகள், நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக வால்பாறை அருகே உள்ள 160 அடி உயரம் கொண்ட சோலையார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

 இதனால் இந்த அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைக்கு வினாடிக்கு 2,131 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 
அணையின் நீர்மட்டம் 150 அடியை தாண்டி உள்ளது. 

இதனால் அந்த அணையில் தேங்கி நிற்கும் தண்ணீர் கடல்போல் காட்சியளிக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 780 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. 

தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால், அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story