மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி
கீழ்பென்னாத்தூரில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழந்தார்.
கீழ்பென்னாத்தூர்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 40). கட்டிட ெதாழிலாளி. இவர் கீழ்பென்னாத்தூர் இந்திரா நகரில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தார். புதிதாக கட்டப்படும் வீட்டில் அமைக்கப்பட்டு இருந்த சென்ட்ரிங் பொருட்களை அகற்றிக்கொண்டிருந்தார்.
அப்போது வீட்டின் அருகில் சென்ற மின்சார கம்பியில் ஈரமாக இருந்த சென்ட்ரிங் பலகை உரசியதில் கார்த்திகேயனை மின்சாரம் தாக்கியது.
இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த கார்த்திகேயன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story