மாவட்ட செய்திகள்

ஆடுகளை திருடிய 2 வாலிபர்கள் கைது கார் பறிமுதல் + "||" + 2 youths arrested for stealing sheep car confiscated

ஆடுகளை திருடிய 2 வாலிபர்கள் கைது கார் பறிமுதல்

ஆடுகளை திருடிய 2 வாலிபர்கள் கைது கார் பறிமுதல்
தியாகதுருகம் அருகே ஆடுகளை திருடிய 2 வாலிபர்கள் கைது கார் பறிமுதல்
கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே வாழவந்தான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்(வயது 54). தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வரும் இவருக்கு சொந்தமான 2 ஆடுகளைமர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து அரிகிருஷ்ணன் கொடு்த்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையிலான போலீசார் நேற்று தியாகதுருகம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 4 ஆடுகள் இருந்தன. விசாரணையில் காரில் வந்தவர்கள் உளுந்தூர்பேட்டை அருகே ஏ.குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் மணிராஜ்(26), குப்புசாமி மகன் விஜயகுமார்(21) என்பதும் வாழவந்தான்குப்பத்தில் 2 ஆடுகள், உளுந்தூர்பேட்டை அருகே குஞ்சரம், புகைப்பட்டி ஆகிய கிராமங்களில் தலா ஒரு ஆடு என மொத்தம் 4 ஆடுகளை திருடி மணிராஜின் நண்பரின் காரில் வைத்து விற்பனைக் கொண்டு செல்ல இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மணிராஜ், விஜயகுமார் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து காருடன் 4 ஆடுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும்இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள சுபாஷ்சந்திரபோஸ் என்பவரை வலைவீசி தேடி வருகிறர்கள். 


தொடர்புடைய செய்திகள்

1. ராசிபுரத்தில் அரசு ‘ஸ்டிக்கரை’ போலியாக ஒட்டியிருந்த கார் பறிமுதல்; காண்டிராக்டர் மீது வழக்கு
ராசிபுரத்தில் அரசு ‘ஸ்டிக்கரை’ போலியாக ஒட்டியிருந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.