2 பேருக்கு டெங்கு காய்ச்சல்


2 பேருக்கு டெங்கு காய்ச்சல்
x
தினத்தந்தி 21 July 2021 11:02 PM IST (Updated: 21 July 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

4 வயது சிறுவன் உள்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு அடுத்தபடியாக தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.  கடந்த சில தினங்களுக்குமுன் பரவத்தொடங்கிய டெங்கு காய்ச்சல் சிறியவர்களை அதிக அளவில் பாதித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன் மற்றும் அழகன்குளம் செட்டிபனை பகுதியை சேர்ந்த 30 வயது நபர் ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுஉள்ளது. தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறுவர்களை தாக்கி வரும் டெங்கு காய்ச்சலால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Next Story